தொடருந்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Colombo Death
By Mayuri Jul 10, 2024 02:33 PM GMT

பெம்முல்ல தொடருந்து நிலையத்திற்கு அருகில் பயணி ஒருவர் தொடருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த தொடருந்தில் இருந்தே அவர் இன்று மாலை தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணிப்புறக்கணிப்பு

தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலையும் மாலையும் சில தொடருந்து சேவைகளே முன்னெடுக்கப்பட்டன.

தொடருந்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு | One Person Died After Falling From The Train

அவற்றில் பெருமளவான பயணிகள் கடும் நெரிசலுக்கு மத்தியில் பயணித்து வரும் நிலையிலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW