கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு!
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Fathima
கர்ப்பிணி பெண்களுக்கு போசாக்கு கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு 5,000 ரூபா பெறுமதியான போசாக்கு கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொடுப்பனவு
இந்த கொடுப்பனவு டிசம்பர் 16 ஆம் திகதி முதல் பிரதேச செயலகங்களூடாக ஊடாக விநியோகிக்கப்படவுள்ளது.

2025 நவம்பர் 30 ஆம் திகதி வரை தாய் சேய் நல நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு முறை மட்டும் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஒரு திட்டமாக, இந்த கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.