அரச வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் அறிவிக்க துரித இலக்கம் அறிமுகம்

Sri Lanka
By Mayuri Oct 11, 2024 11:47 AM GMT

அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் 1997 என்ற துரித இலக்கம் ஊடாக அறிவிக்க முடியும் எனப் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதுதவிர, அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் கடத்தப்படுகின்றமை தொடர்பிலும் அந்த இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரியான தகவல்களை வழங்குபவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் எனவும் பதில் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.