வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Dollars Foreign Employment Bureau
By Faarika Faizal Oct 27, 2025 07:32 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

இலங்கையில் இருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் ஜூன் மாதம் வரை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 1,43,037 பேர் எனப் புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் நட்டம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் நட்டம்

மொத்த எண்ணிக்கை  

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரியில் 25,149 பேர் வெளிநாடு சென்றிருந்தனர். அத்துடன் இந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஜனவரி மாதத்தில் 25,873 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Number Of Sri Lankans Went Abroad For Employment

இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகமாகும்.

இருப்பினும், பெப்ரவரி மாதம் முதல் வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் அதே மாதங்களுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

மேலும், ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 5% குறைந்துள்ளதாக இந்த சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இலங்கை பாடகர்

விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இலங்கை பாடகர்

கொழும்புப் பல்கலைக்கழக நூலகத்திற்கு தனது புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய சந்திரிக்கா

கொழும்புப் பல்கலைக்கழக நூலகத்திற்கு தனது புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய சந்திரிக்கா

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW