இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

Central Bank of Sri Lanka
By Mayuri Jul 28, 2024 06:02 AM GMT

170,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஏல விற்பனையில் வழங்கப்படவுள்ள திறைசேரி உண்டியல்

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு | Notification Of Central Bank Of Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW