நோபல் பரிசு எனக்கு ஒரு பொருட்டல்ல! அமெரிக்க ஜனாதிபதி விரக்தி

By Fathima Jan 08, 2026 11:25 AM GMT
Fathima

Fathima

நான் தனியாகவே 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். நோபல் பரிசு எனக்கு ஒரு பொருட்டல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''நேட்டோ நாடுகளைக் காப்பாற்றியது நான்தான். என்னுடைய தனிப்பட்ட முயற்சியால் நேட்டோ நாடுகளுக்கான நிதிப் பங்களிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்.

நான் தனியாகவே 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். நோபல் பரிசு எனக்கு ஒரு பொருட்டல்ல. நியாயமற்ற முறையில் தனக்கு நோபல் பரிசை நோர்வே மறுத்துள்ளது. நோர்வே முட்டாள்தனமான முடிவை எடுத்துள்ளது.

சீனாவும் ரஷ்யாவும் பயப்படும் ஒரே நாடு அமெரிக்காதான். மோதல்களைத் தடுத்து அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட காரணமாக இருக்கும் நாடும் அமெரிக்காவே.'' என்று கூறியுள்ளார்.