கோழி இறைச்சியின் விலை தொடர்பில் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Money
By Rakshana MA
இலங்கையில் தற்போது முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கோழி இறைச்சியின் விலை குறைவடையவில்லை என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர (Ajith gunasekara) இதனைத் தெரிவித்துள்ளார்.
விலை குறைப்பு
அத்துடன், முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி (VAT) குறைக்கப்பட்டால் இறைச்சி சார்ந்த உணவுப்பொருட்களின் விலையைக் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |