புதிய அமைச்சரவையின் நாடாளுமன்ற சபாநாயகராக நிஹால் கலப்பத்தி
அநுரவின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் நாடாளுமன்ற சபாநாயகராக நிஹால் கலப்பத்தி (Nihal Galappaththi) நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பதவிக்காக பிமல் ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்ட போதிலும் பின்னர் அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அவர் 125,983 விருப்பு வாக்குகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பெரும்பான்மையான வாக்கு
அதுமட்டுமன்றி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் பெரும்பான்மையான வாக்குகளையும் பெற்றிருந்தது.
இதேவேளை, புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |