பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: பிரதமர் அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சுகாதார சேவைகளை நவீனமயமாக்குவதற்கு புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் ஆதரவின் கீழ் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தன் மூலம் இதனை மேம்படுத்தவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை கல்வி நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கலந்துரையாடல்
அத்தோடு, கடந்த சில வருடங்களில், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய வீதம் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையில் இடைநிலைக் கல்விக்கான தகவல் தொழில்நுட்ப பாடப் பகுதியின் அபிவிருத்தி குறித்தும் பிரதமர் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |