காற்பந்து விளையாடக்கூடிய புதிய ‘எந்திரன்’

World Tamil Entrepreneurs Conference
By Nafeel Apr 20, 2023 02:23 AM GMT
Nafeel

Nafeel

1.42 மீட்டர் உயரம்… 38 கிலோகிராம் எடை…உலகில் எங்கும் காணமுடியாத இயந்திர மனிதனைக் கலிபோர்னியா லாஸ் ஏஞ்சலிஸ் பல்கலைக்கழகத்தின் பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ARTEMIS (Advanced Robotic Technology for Enhanced Mobility and Improved Stability) எனும் அந்த இயந்திர மனிதனால் காற்பந்து விளையாடமுடியும்…

அதிவேகமாக ஓடிப் பந்தை உதைக்க முடியும்… அதன் மீது பொருள்கள் வீசப்படும்போது தொடர்ந்து நேரே நிற்கமுடியும். “

காற்பந்து விளையாடக்கூட முடியவில்லை என்றால் ஓர் இயந்திரத்தால் எப்படிப் பிறரைக் காப்பாற்றுவது போன்ற முக்கியமான பணிகளைச் செய்யமுடியும்?”

என்பதே ARTEMISஐ உருவாக்கிய பேராசிரியர் டெனிஸ் ஹோங்கின் கேள்வி.ARTEMIS இயந்திரத்தின் கால்கள் உண்மையான மனிதர்களின் கால்களைப் போலவே நகரக்கூடியவை. அவற்றில் இருக்கும் சக்தியைக் கொண்டு அசைவுகளை உண்டாக்குகிறது இயந்திரம். எனவே மற்ற இயந்திரங்களைப் போல நேராக மட்டுமே நகராமல் வளையக்கூடிய ஆற்றலையும் பெற்றுள்ளது .