நடைமுறைக்கு வந்துள்ள புதிய மின்சார சட்டமூலம்

CEB Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena Ceylon Electricity Board
By Rukshy Jun 29, 2024 04:15 AM GMT
Rukshy

Rukshy

மூன்று வாரங்களுக்கு முன்னர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவால் அங்கீகரிக்கப்பட்ட புதிய மின்சார சட்டமூலம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த புதிய மின்சார சட்டமூலத்தை சபாநாயகர் நேற்று முன்தினம் (27) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.

மேலதிக வாக்குகள்

இதன்மூலம் குறித்த சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரம் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.

new-electricity-act-which-has-come-into-effect-

மின்சாரத் தொழிலுக்கான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யும் நோக்கிலான இந்த சட்டமூலம் 2024 ஏப்ரல் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது. 

இதனையடுத்து சட்டமூலம் கடந்த 6 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.  

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW