நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Jaffna Sri Lanka Sri Lankan Peoples Jaffna Teaching Hospital
By Chandramathi May 07, 2024 12:21 AM GMT
Chandramathi

Chandramathi

போதனா வைத்தியசாலைகள் தொடர்பான போலி செய்திகள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,''போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.

தரமான சுகாதார சேவைகள்

உலகில் இலவச சத்திரசிகிச்சைகளை வழங்கும் நாடுகள் பாரியளவில் இல்லை. ஆனால் இலங்கையில் சாதாரண காய்ச்சலுக்கான மருந்து உட்பட மூளை சத்திரசிக்சை வரை இலவச தரமான சுகாதார சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | New Announcement For The Public

யாழ்.போதனா வைத்தியசாலை என்பது மிகவும் சிறந்த சேவையை வழங்கும் ஒரு வைத்தியசாலையாகும்.

அதேபோன்று நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான போதனா வைத்தியசாலைகளில் ஆயிரக்கணக்கான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே போதனா வைத்தியசாலைகள் தொடர்பில் தெரிவிக்கப்படும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மக்கள் வீண் அச்சம் கொள்ள தேவையில்லை.''என கூறியுள்ளார்.