திரையரங்குகளுக்குள் தொலைபேசி கொண்டு செல்வதைத் தடுக்க புதிய சட்டம்

Sri Lanka
By Mayuri Jul 18, 2024 05:55 AM GMT

திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வது தொடர்பாக புதிய சட்டம் இயற்ற வேண்டும் எனத் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைப்பேசிகளை எடுத்துச் செல்வதைத் தடுக்க புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது.

தேவையான சட்ட ஏற்பாடுகள்

அது தொடர்பில் திரைப்படக் கூட்டுத்தாபனம் தலையிட்டு தேவையான சட்ட ஏற்பாடுகளைத் தயாரிக்க வேண்டுமென அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

திரையரங்குகளுக்குள் தொலைபேசி கொண்டு செல்வதைத் தடுக்க புதிய சட்டம் | New Act In Sri Lankan Cinemas

கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் காரணமாக இந்தத் தீர்மானத்தை மேற்கொள்வது பொருத்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW