ஜனாதிபதிக்கு ஆதரவாக களமிறங்கிய இளைஞர்கள்! தேர்தல் நோக்கிய புதிய திட்டம்

Ranil Wickremesinghe Sri Lankan Peoples President of Sri lanka
By Chandramathi Apr 28, 2024 01:26 AM GMT

'ரணிலுக்கு இடம் கொடுப்போம்'' என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரைக்கு அருகில் நேற்று ஆரம்பமானது.

மோட்டார் சைக்கிள் பேரணி

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த தேசிய இளைஞர் முன்னணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்களின் பழைய உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளது.

ஜனாதிபதிக்கு ஆதரவாக களமிறங்கிய இளைஞர்கள்! தேர்தல் நோக்கிய புதிய திட்டம் | Nationwide Motorcycle Rally Support For Ranil

நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பயணிக்கும் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி மாளிகாவத்தையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தை சென்றடையுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தனவின் வழிகாட்டலின் கீழ் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.