சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ள தேசிய பூங்காக்கள்

Tourism Department Of Wildlife Flood Disaster
By Fathima Dec 11, 2025 05:43 AM GMT
Fathima

Fathima

'டிட்வா' சூறாவளியால் மூடப்பட்டிருந்த பல தேசிய பூங்காக்கள் மற்றும் தங்குமிடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

யால (பிரிவு 6 தவிர), வில்பத்து, குமண, வஸ்கமுவ, ஹோட்டன் சமவெளி, கவுடுல்ல மற்றும் மின்னேரியா தேசிய பூங்காக்கள் நவம்பர் 28 முதல் மூடப்பட்டதுடன் சுற்றுலா பங்களாக்கள் மற்றும் முகாம் தளங்கள் பகல்நேரம் திறந்து இரவு மூடப்பட்டன.

சுற்றுலா நடவடிக்கை

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்கா, குமண தேசிய பூங்கா மற்றும் யால தேசிய பூங்கா (தொகுதிகள் 1–4) டிசம்பர் 1, முதல் பகல்நேர பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ள தேசிய பூங்காக்கள் | National Parks And Bungalows Reopen For Tourist

யால தேசிய பூங்காவின் பலடுபன நுழைவாயில் மற்றும் ஹீன்வேவ, ஒந்தாச்சி, மஹாசிலா, புதிய பூட்டா மற்றும் பழைய பூட்டாவில் உள்ள சுற்றுலா பங்களாக்கள் டிசம்பர் 3, முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

யால தேசிய பூங்காவின் பழைய தோட்டுபொல மற்றும் வஹாரண பங்களாக்கள் டிசம்பர் 7, 2025 முதல் பிரிவு 5 மற்றும் குடகல் அனும பங்களாக்கள் டிசம்பர் 8, முதல், வில்பத்து தேசிய பூங்காவில் உள்ள மெனிக் விலா மற்றும் லுனு வேவா பங்களாக்கள் டிசம்பர் 10, முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்களில் தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொருத்தமான வீதிகளைப் பயன்படுத்தி, சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தங்கள் சொந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவுறுத்துகிறது.