தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்கள்!

Death Weather Floods In Sri Lanka
By Fathima Dec 03, 2025 04:52 AM GMT
Fathima

Fathima

இலங்கையை பாதித்த டித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவித்து சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

22 மாவட்டங்கள்

நாட்டின் பல பகுதிகளை பாதித்த பாதகமான வானிலை, கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்ட சேதத்தை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்கள்! | National Disaster Areas

அதற்கமைய, கண்டி, நுவரெலியா, பதுளை, குருணாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலநறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, களுத்துறை ஆகியவை தேசிய பேரிடர் வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

டித்வா சூறாவளி காரணமாக கண்டி மாவட்டத்தில் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதாக தேசிய இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.