ஜனாதிபதியை கடுமையாக சாடிய நாமல்...
மக்கள் விடுதலை முன்னணியினருக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்புகள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொருந்தும் என ஜனாதிபதி நம்பினால் அது முற்று முழுதான தவறு என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுமாப்புடன் எடுக்கும் தீர்மானங்கள் இந்த தேசத்திற்கோ அல்லது அவருக்கோ நன்மைகளை ஏற்படுத்தாது எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டி உள்ளார்.
மறுசீரமைப்பு
உத்தேச கல்வி மறுசீரமைப்பு நாட்டுக்கு பொருத்தமற்றது என்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ஆயத்தமாக இருப்பது அவரது பேச்சுக்களில் தென்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு பொருத்தமான நாட்டுக்கு தேவையான விடயங்களை மட்டும் அமுல்படுத்துவது அவசியமானது என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இறுமாப்புடன் எடுக்கும் தீர்மானங்கள் தேசத்திற்கோ ஜனாதிபதிக்கா நியாயத்தை வழங்காது என தெரிவித்துள்ளார்.
இறுமாப்புடன் எடுக்கும் தீர்மானங்கள்
கல்வி முறை மற்றும் அரசு இயந்திரத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு எனினும் அறிமுகம் செய்யப்படும் எந்த ஒரு மறுசீரமைப்பும் நாட்டுக்கு பொருத்தமுடையதாக இருக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணிக்கு பொருந்தக்கூடிய மறுசீரமைப்புக்களை கொண்டுவரக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டுக்கு பொருத்தமற்ற கல்வி மறுசீரமைப்புகளை அறிமுகம் செய்யும் முயற்சிகளின் சகல பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.