கொழும்பு பிரபல பாடசாலை மாணவனின் காணொளி! சர்ச்சைக்குரிய விடயம் குறித்து விசாரணை

Ministry of Education Colombo Sri Lankan Schools
By Fathima Jan 30, 2026 07:16 AM GMT
Fathima

Fathima

கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஆண்கள் பாடசாலை தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவெவ அக்கல்லூரியின் அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளிகள் குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கைகள்

சம்பவம் தொடர்பில் அதிபரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனின் காணொளி! சர்ச்சைக்குரிய விடயம் குறித்து விசாரணை | Nalanda College Video Colombo

குறித்த அறிக்கை கிடைக்கும் வரை, இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.    

அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில், இணையத்திலிருந்து தொடர்புடைய காணொளிகளை நீக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைப்பாட்டை தொடர்ந்து அந்த மாணவர் உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, காணொளியில் நான்கு பெண் ஆசிரியர்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இரண்டு பேர் மட்டுமே பெண் ஆசிரியர்கள் என்றும், அவர்களும் தற்போது அந்த பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.