மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையம் நடாத்திய விருது வழங்கல் நிகழ்வு
மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் கலை இலக்கிய கூடலும், விருது வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இந்த விருது வழங்கும் நிகழ்வானது மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தில் நேற்று(29) மாலை நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை மனோன்மணி கணேசபிள்ளையும், தலைக்கோல் விருதினை கூத்தர் க. தயாபரன், நாடகர் காளி காளிதாஸ் மற்றும் ஆடகி சிவதர்சினி மனோஜ்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விருதுகள்
அத்துடன் இளம் கலைஞர்களுக்கான விருதினை ஜனகன் சிறிதரன், ஊடகவியலாளர் நஹீம் முகமட் புஹாரி, மற்றும் ஜுனைட் முகமட் இஹ்ஷான், மகிழ் இசைவாணி விருதினை மிதுர்சா அமலநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.
தொடர்ந்தும் இந்த நிகழ்வில், சிறப்பு அதிதியாக தமிழ்நாட்டு பேராசிரியர் கி.பார்த்திபராஜாவினால் எழுதப்பட்ட தெருக்கூத்து ஒரு அறிமுகம் என்ற நூல் வெளியீட்டு வைக்கப்பட்டதோடு, தெருக்கூத்து தொடர்பாக விசேட உரையையும் அவர் ஆற்றினார்.
மேலும், நினைவுச் சின்னமும் பொன்னாடையும் போர்த்தி பிரதி அமைச்சர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |