முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; அமித்ஷா சர்ச்சை கருத்து
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானின் ஊடுருவல்களாளே இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நரேந்திர மோகன் நினைவு சொற்பொழிவு மற்றும் இலக்கிய படைப்பு விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அந்தவகையில், சுதந்திரத்திற்குப் பின் பாகிஸ்தானில் இந்துக்கள் 13சதவீதமாகவும், சிறுபான்மையினர் 1.2சதவீதமாகவும் இருந்த நிலையில் தற்போது 1.73சதத்தினர் மட்டுமே உள்ளனர்.
அத்துடன், பங்களாதேசில் 22 சதவீதமாக இருந்த இந்துக்கள் தற்போது 7.9சதவீதமாக மட்டுமே உள்ளனர் என காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட ஊடுருவல்களை பட்டியலிட்டு அமித்ஷா குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் பேசிய போது, “முஸ்லிம் மக்கள் தொகை 24.6சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இந்து மக்கள் தொகை 4.5 சதவீதம் குறைந்துள்ளது. இது கருவுறுதல் அல்ல, பங்களாதேஷ், பாகிஸ்தானின் ஊடுருவலால் நிகழ்ந்துள்ளது.
அத்துடன், ஊடுருவுபவர்களைக் கண்டறிதல், நீக்குதல் மற்றும் நாடு கடத்தல் செயல்முறையை நாங்கள் பின்பற்றுவோம். இந்த நாட்டின் குடிமக்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை கிடைக்க வேண்டும். உலகில் யாராவது தடையின்றி இங்கு வர அனுமதிக்கப்பட்டால், நம் நாடு ஒரு தர்மசாலையாக மாறும்” என பேசினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |