பாடசாலைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!!

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Dec 11, 2024 08:53 AM GMT
Rakshana MA

Rakshana MA

பாடசாலைகளின் தேவைகள், குறைபாடுகளை அறிந்து நிவர்த்தி செய்யும் நோக்கில் பாடசாலைகளுக்கான அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்யும் பணி நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரினால்(Ashraff Thahir) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று(10) நிந்தவூர் பதுரியா வித்தியாலம் மற்றும் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயம் ஆகியவற்றிற்கு நேரடியாகச் சென்று அங்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்ததுடன் மாணவர்களின் தேவைகள், குறைபாடுகளை அறிந்து செயலாற்றும் நோக்கில் “குறைகேள் பெட்டி” கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்: வெளியான எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்: வெளியான எச்சரிக்கை

கள விஜயம்

இதன்போது பதுரியா வித்தியாலயத்தின் அதிபர் மெளலவி ஜெசீர் அலி தலைமையில் பாடசாலைச் சமூகத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினர் மாலை அணிவிக்கப்பட்டு பூக்கள் தூவி வரவேற்கப்பட்டதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

பாடசாலைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!! | Mp Thahir Gave Helps For Students

அதேபோல் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தின் அதிபர் ஜாபிர் தலைமையில் பாடசாலை மாணவர்களினால் பேன்ட் வாத்தியத்துடன் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.

மேலும் இதில் உயர்தர பிரிவு மாணவர்களின் வகுப்பறை பெளதீக குறைபாடுகளை நேரடியாக பார்வையிட்டுள்ளார்.

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

சீனத்தூதுவரால் கையளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி

சீனத்தூதுவரால் கையளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery