கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்டுள்ள 3 மாத விடுமுறை

Gajendrakumar Ponnambalam Lakshman Kiriella Selvarajah Kajendren
By Aadhithya Jul 02, 2024 01:56 PM GMT

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு (Gajendrakumar Ponnambalam) நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்று (02) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போதே இது தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளது.

பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்ததையடுத்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்லவினால் (Lakshaman Kiriella) கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஜூலை 2 ஆம் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்கு விடுமுறையளிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்டுள்ள 3 மாத விடுமுறை | Mp Gajendrakumar Ponnambalam 3 Months Leave  

யாழ். மாவட்டம்

இதனை நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kejendran) வழிமொழிந்துள்ளார்.

இதனையடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு மூன்று மாதங்களுக்கு விடுமுறை வழங்க சபை இணக்கம் வெளியிட்டுள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW !