ஐஸ் போதைப் பொருளை விடவும் ஆபத்தான போதைப்பொருள் இலங்கையில் கண்டுபிடிப்பு
Sri Lanka Police
Sri Lanka
By Mayuri
ஐஸ் போதைப் பொருளை விடவும் ஆபத்தான போதைப்பொருள் முதல்முறையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி வெலிகம பிரதேசத்தில் வைத்து போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மோல்டா நாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பகுப்பாய்வாளர் திணைக்கள பரிசோதனைக்கு
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்கள பரிசோதனைக்கு உட்படுத்திய போது, குறித்த போதைப்பொருள் ''மெபட்ரோன்'' ( ‘Mephedrone’) எனப்படும் ஆபத்தான போதைப்பொருள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது ஐஸ்போதைப்பொருளை விடவும் பன்மடங்கு ஆபத்தான போதைப் பொருளாகும்.