முன்னாள் ஜனாதிபதியின் திட்டத்தால் உயிரிழந்த 400 யானைகள்!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்ட மொரகஹகந்த திட்டத்தினால் 400 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக வனஜீவிகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலாளர் நயனக்க ரண்வல்ல தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மின்னேரியா தேசியப் பூங்கா பல நூற்றாண்டுகளாக யானைகளின் சரணாலயமாக இருந்து வருகிறது.
முன்னெடுக்கப்பட்ட திட்டம்
குறிப்பாக நீர் மட்டம் குறையும் போது யானைக் கூட்டங்கள் உணவு மற்றும் தீனி தேடி மின்னேரியா குளத்திற்கு வருகை தருகின்றன. மே மாதம் முதல் செப்டம்பர் வரை மின்னேரிய தேசிய பூங்கா ஆசியாவின் பெரும் அதிசயமாக பார்க்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல், திறந்து விடப்படும் நீரினால் குளக்கரையின் பசுமையான புற்கள் நீரில் மூழ்குவதால் உணவு மற்றும் தீனி இன்றி அவை விரிந்து சென்று மரணித்ததாக தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு 400 யானைகள் இருந்ததாகவும் 2021 இல் 20 யானைகளே எஞ்சியுள்ளன. இந்நிலையில், மொரகஹகந்த திட்டத்தின் பின்னர் விவசாயத்தில் 100 மில்லியன் வருமானம் ஈட்டுவதற்காக 4000 மில்லியனை இழந்ததோடு மட்டுமல்ல 400 யானைகளையும் காவுகொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |