ரணிலின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சத்தியப்பிரமாண விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஸ்டிரபவனில் சந்தித்தபோது இலங்கைக்கு வருகைத் தருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன் டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும், இலங்கை ஜனாதிபதியும் பிரதமர் மோடியின் இலங்கை வருகை குறித்து இன்று திங்கட்கிழமை விவாதித்தனர்.
இந்தநிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மோடி இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,இந்திய பிரதமரின் பயணம் தொடர்பான ஏற்பாடுகளுக்காக விரையில் இலங்கைக்கு வரவுள்ளார்.