க.பொ.த. உயர்தர பரீட்சை : கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Ministry of Education G.C.E.(A/L) Examination Education
By Raghav Aug 08, 2025 07:22 AM GMT
Raghav

Raghav

 2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education) அறிவித்துள்ளது. 

க.பொ.த. (உயர்தர) பரீட்சை

இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

க.பொ.த. உயர்தர பரீட்சை : கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Ministry Of Education Announcement Al Students

2024 ஆம் ஆண்டு மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 2025 உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மற்றும் 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு குறிப்பிட்ட காலத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை காலம் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் மேலும் நீட்டிக்கப்படாது என்று கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.