பால்மா விலை தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Milk Powder Price in Sri Lanka
By Chandramathi Apr 11, 2023 05:26 PM GMT
Chandramathi

Chandramathi

எதிர்வரும் ஜூன் மாதமளவில் பால்மா பொதிகளின் விலை மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்று ஆயிரத்து 120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

பால்மா விலை தொடர்பில் வெளியான தகவல் | Milk Powder Price In Sri Lanka

பால்மா விலையில் மீண்டும் திருத்தம் 

அத்துடன் மூவாயிரத்து 100 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதமளவில் பால்மாக்களின் விலையில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.