பால்மா விலையில் மாற்றம்
Milk Powder Price in Sri Lanka
Nalin Fernando
By Kamal
எதிர்வரும் நாட்களில் பால் மாவின் விலை குறைக்கப்படும் என வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதி அளவில் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 150 ரூபாவினால் குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை
பால் மா விலை குறைப்பு தொடர்பில் பால்மா ஏற்றுமதியாளர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஓரளவு பெரிய வெங்காயத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.