மிஹிந்தலை விஹாரைக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்

Kamal Gunaratne Sajith Premadasa
By Kamal Jun 17, 2024 02:18 AM GMT

மிஹிந்தலை விஹாரைக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிஹிந்தலை விஹாரையின் விஹாராதிபதி வலவே ஹெங்குனெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை விஹாரைக்கு தற்பொழுது பொலிஸ் பாதுகாப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது போதுமானதல்ல என பல தடவைகள் அரசாங்க அதிகாரிகள் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை விஹாரைக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் | Mihinthla Thero Wants Army Protection

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன எவ்வித கவனமும் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த போது மிஹிந்தலை விஹாராதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.