இலங்கையர்களுக்கு விண்கல் மழையை காண வாய்ப்பு

Sri Lankan Peoples Weather
By Fathima Aug 13, 2023 09:40 AM GMT

இந்த நாட்களில் கண்கவர் விண்கல் மழையை காண முடியும் என வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் அதிகாலை வேளையில் இந்த விண்கல் மழையை காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது Perseid விண்கல் மழை என அழைக்கப்படுவதாக கிஹான் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

இந்த விண்கற்களை காலை 01 மணி முதல் காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிவானத்தில் இருந்து எழும் விண்கற்கள் மெதுவாக வானத்தை நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்