பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம்

Earthquake
By Dharu May 04, 2024 08:18 AM GMT
Dharu

Dharu

Courtesy: Chandana

மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள லெய்ட் மாகாணத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் கடலோர நகரமான துலாக்கில் இருந்து தென்கிழக்கே 32 கிலோமீட்டர் தொலைவில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று (03) மாலை 6.16 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் பல அதிர்வுகள் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸின் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம் | Massive Earthquake In The Philippines

லேய்ட் மாகாணத்தின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.