கொழும்பில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்கள்!
கொழும்பின் புறநகர் பகுதியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நடத்தப்பட்ட மூன்று தகாத விடுதிகள் சுற்றி வளைக்கப்பட்டு, 9 பெண்களும் 3 உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று உரிமையாளர்களும் ஒன்பது பெண்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, மூன்று உரிமையாளர்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சரீரப் பிணை
9 பெண்களையும் தலா 100,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கவும், சமூக நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் மருத்துவ அறிக்கையுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கிரிபத்கொட பொலிஸாருக்கு தலைமை நீதவான் உத்தரவிட்டார்.

ராகம, தெஹியோவிட்ட மற்றும் தெலிஜ்ஜவில ஆகிய இடங்களைச் சேர்ந்த மூன்று உரிமையாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அத்துடன் மரதன்கடவல, ரத்தோட்டை, இரத்தினபுரி, கண்டி, பொலன்னருவ, வாதுவ, பண்டாரவளை, கடவத்த மற்றும் ராகம ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 முதல் 46 வயதுக்குட்பட்ட ஒன்பது பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த ஆறாம் திகதி நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் பேரில் மூன்று தகாத விடுதிகளும் முற்றுகையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.