மருதமுனை அக்பர் வித்தியாலய வித்தியாரம்ப விழா!
மருதமுனை பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தில், தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (29) காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு, பாடசாலை அதிபர் ஏ.எச். அலி அக்பர் தலைமையில் நடைபெற்றது.
புதிதாக பாடசாலையில் இணையும் மாணவர்கள் அன்புடனும் உற்சாகத்துடனும் வரவேற்கப்பட்டனர்.
வித்தியாரம்ப விழா
அவர்களது கல்விப் பயணம் சிறப்பாகவும் ஒழுக்கமுடனும் அமைய வேண்டும் என்ற நோக்கில், ஆசிரியர்களால் வழிகாட்டல் உரைகளும் வாழ்த்துகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி டீ.எல். அப்துல் மனாப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஏடு தொடக்கி வைத்தார்.
கௌரவ அதிதி, விசேட அதிகளாக கல்விமான்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சிறுவர் நட்பு சூழலில் கல்வியை ஆரம்பிக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




