மகிந்தவுக்கு 400 வருட சிறை தண்டனை! குற்றத்தை அம்பலப்படுத்திய பொன்சேக்கா
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளதால், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒன்றிணைந்துள்ளனர் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும், 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற நிதி மோசடியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
"இந்த அரசியல்வாதிகள் ஆட்சியில் இருந்தபோது செய்த செயல்களின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.
அதனால்தான் நாங்கள் அவர்களை வெலிக்கடை பகுதியில் பார்க்கிறோம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகசவை 400 ஆண்டுகள் சிறைக்கு அனுப்ப வேண்டும். 2010 ஆம் ஆண்டு நாட்டை ஆண்ட கூட்டணி 65 பேரை அழைத்துச் சென்று உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது தனக்கு ஓரளவு மரியாதை இருக்கின்றது.
ஆனால் முன்னாள் உயர் அதிகாரிகளை அவர்களின் செயல்களுக்குப் பொறுப்பேற்க வைக்கும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கையை வரவேற்கிள்றேன்
மேலும், போரின் கடைசி கட்டங்களில் ராஜபக்ச நிர்வாகம் தன்னை ஓய்வு பெறச் செய்து, ஜகத் ஜெயசூர்யாவை இராணுவத் தளபதியாக நியமிக்க முயற்சித்தது.” என்றும் கூறியுள்ளார்.