வீட்டை விட்டு வெளியேற தயார் : பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட மகிந்த குடும்பம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராக இருப்பதாக அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தற்போது, மகிந்த ராஜபக்ச, குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் வலுக்கட்டாயமாக அல்லாமல் அரசியலமைப்பு உரிமையின் அடிப்படையில் தங்கியுள்ளார்.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறிய பிறகு, அவர் இல்லத்தை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக நாமல் கூறியுள்ளார்.
மகிந்தவின் உத்தியோகபூர்வ வீடு
ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் எடுத்த தீவிரமான முடிவுகளுக்காக பிற்காலத்தில் ஆபத்துக்களை சந்திக்க நேரிடலாம் எனவும் சுட்டிக்காட்டிய நாமல், இதனால் அவர்களுக்கு சில பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தற்போதைய ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பொருந்தும் ஒரே மாதிரியான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய பிறகு பாதாள உலகக் கும்பலின் ஆபத்தை எவ்வாறு கையாள்வார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு, அவர்கள் பதவிக்காலத்தில் தீர்மானங்களை மேற்கொள்வதை எளிதாக்குவதற்காக அரசியலமைப்பால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |