சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksha) சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (27.06.2024) சீனாவுக்கு பயணமான மகிந்த ராஜபக்ச, சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
வளர்ச்சித் திட்டங்கள்
பீஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சீன வெளியுறவு அமைச்சரின் அழைப்பின் பேரிலேயே மகிந்த குறித்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
மேலும், இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கு நன்மை பயக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்தும் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |