மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு: உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் வைத்தியசாலையில்
மித்தெனிய - ஜுலம்பிட்டிய பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பு மனுக்களை கையளித்த ஜுலம்பிட்டியவில் வசிக்கும் கே.கே. பிரபாத் இந்திக என்ற நபர் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு
தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த நபர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |