லிட்ரோ சமையல் எரிவாயு விலை மாற்றம்! வெளியான தகவல்

Sri Lanka Litro Gas Sri Lankan Peoples Litro Gas Price
By Dharu Aug 01, 2025 11:10 AM GMT
Dharu

Dharu

ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 3,690 ரூபாயுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

லிட்ரோ சமையல் எரிவாயு 

5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 1,482 ரூபாயுக்கும் 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 694 ரூபாயுக்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் நிறுவனம் (LAUGFS Gas PLC) அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இன்று (01.08.2025) லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் இயக்குநர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.