அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

Sinhala and Tamil New Year Sri Lanka Sri Lankan Peoples
By Chandramathi Apr 13, 2023 12:00 AM GMT
Chandramathi

Chandramathi

தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.  

அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் கலால் வரி ஆணையாளருமான கபில குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

விசேட செயற்பாடுகள்

அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு | Liquor Shops Closed In Sri Lanka

இதற்கமைய இன்று (13) மற்றும் நாளை (14)  நாடு முழுவதுமுள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும்.

மேற்படி தினங்களில் மதுபான விநியோகம் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விசேட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.