பலத்த மின்னல் ஏற்படும்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Galle Kalutara Matara
By Fathima Dec 13, 2025 01:36 PM GMT
Fathima

Fathima

நாட்டின் சில மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேவையான நடவடிக்கை

எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பலத்த மின்னல் ஏற்படும்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Lightning Warrning To Srilanka

இன்று (13) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மின்னல் தாக்கத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.            

Gallery