சடுதியாக அதிகரித்த எலுமிச்சை விலை : வெளியான தகவல்

Lemon Green Chilli Sri Lanka Economy of Sri Lanka
By Shalini Balachandran Jul 23, 2024 09:49 AM GMT

ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளதாகவும் மற்றும் ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ஏறக்குறைய ஆயிரம் ரூபாயை விட அதிகமெனவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக சற்றே குறைந்திருந்த மரக்கறிகள் விலைகள் மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிலோ கறி மிளகாயின் சில்லறை விலை 900 ரூபாவாகவும் ஒரு கிலோ போஞ்சி 800 ரூபாவாகவிற்கும் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்துள்ள விலை

அத்தோடு, ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் சில்லறை விலை 560 ரூபாவாகவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் சில்லறை விலை 300 ரூபாவாகவும் மேலும் ஒரு கிலோ முருங்கைக் காய் 800 முதல் 1000 ரூபாய் வரை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சடுதியாக அதிகரித்த எலுமிச்சை விலை : வெளியான தகவல் | Lemon Price Incresed

மேலும்,  ஒரு கிலோ தக்காளி விலை 600 ரூபாய் ஆகவும் மற்றும் ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 3600 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW