புடின் போல் அதிர்ஷ்டம் வருகின்றது: ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகும் குமார வெல்கம

Kumara Welgama Vladimir Putin UNP
By Madheeha_Naz Mar 19, 2024 12:43 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிர்ஷ்டம் வருகின்றது எனவும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறினேன். ஆனால், மக்கள் வாக்களித்தனர்.

பெரும் பாதிப்பு

இறுதியில் என்ன நடந்தது? நான் கூறியதுபோல் நாட்டுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, எமது கருத்துக்களையும் மக்கள் செவிமடுக்க வேண்டும்.

புடின் போல் அதிர்ஷ்டம் வருகின்றது: ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகும் குமார வெல்கம | Kumara Welkama Is Presidential Election

எனக்குக் கட்சி இருக்கின்றது, சிறந்த தலைவராக நான் உள்ளேன். அதுமட்டுமல்ல ஜாதக நிலையும் நல்லதாகவே உள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிஷ்டம் தென்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கான அனைத்து தகுதியும் எனக்கு இருக்கின்றது.

எனக்கு இல்லாத தகைமை என்ன?" என அவர் கேள்வி எழுப்பினார்.