விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ். நபர் உயிரிழப்பு

Jaffna Kilinochchi
By Mayuri Jun 29, 2024 12:02 PM GMT

கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி - மாங்குளம் - பனிச்சங்குளம் பகுதியில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ். நபர் உயிரிழப்பு | Kilinochchi Accident Injured Person

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குறித்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் ஒருவரே சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW