ஐ.தே.கவில் இணைந்தார் மகிந்த கஹந்தகம

Colombo Srilanka Freedom Party
By Mayuri Jul 03, 2024 10:55 AM GMT
Mayuri

Mayuri

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு நகரசபையின் முன்னாள் மாநகர சபை உறுப்பினரான மகிந்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்னிலையில் சிறிகொத்தவில் இன்று (03) ஐக்கிய தேசியக் கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

தாக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்

இந்த நிலையில், கொழும்பில் 2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி அன்று இடம்பெற்ற வன்முறையின் போது, போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட முக்கியமானவர்களில் இவரும் ஒருவர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.கவில் இணைந்தார் மகிந்த கஹந்தகம | Kahandavela Joined The United National Party

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW