ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாஷிம் நியமனம்

SJB Kabir Hashim Sajith Premadasa Sri Lanka
By Vinoja Apr 11, 2026 08:34 AM GMT

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம், 2026 ஆம் ஆண்டிற்கான கட்சியின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற ரீதியில் வழங்கி வைத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த உறுப்பிரான கபீர் ஹாஷிம் ,இதற்கு முன்னர் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.