காசா மீது தாக்குதலுக்கு எவர் ஒப்புதலும் தேவையில்லை: நெதன்யாகு எச்சரிக்கை
காசா அல்லது லெபனான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு எவர் ஒப்புதலும் தேவையில்லை என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், "நாங்கள் எங்கள் சொந்த முடிவுகளால் எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம், எங்கள் தலைவிதியை நாங்களே தொடர்ந்து தீர்மானிப்போம்.
இதற்காக நாங்கள் யாருடைய ஒப்புதலையும் பெறப்போவதில்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஆதரவு
மேலும், எங்கள் பாதுகாப்பை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் எனவும் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், காசா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களுக்கு மட்டுமின்றி இஸ்ரேலின் இதுவரையான அனைத்து இராணுவ நடவடிக்கைகளிலும் அமெரிக்கா தனது முழு ஆதரவையும் அளித்து வந்துள்ளது.
அத்துடன், கத்தார் மீதான இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, அமெரிக்கா கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. இனி அவ்வாறு நடக்காது என்று மட்டும் அறிவித்தது.

ஆனால் கத்தார் மீது ஈரான் நடத்திய தாக்குதலை அமெரிக்கா கடுமையாக கண்டித்ததுடன் பதிலடி உறுதி என்றும் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இஸ்ரேலின் எதிரிகள் மீது தாக்குதல் நடத்த ஒப்புதல் தேவை இல்லை." என அமைச்சர்கள் கூட்டம் ஒன்றில் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |