காசா நிர்வாகத்தில் ஹமாஸ்க்கு பங்கு இல்லை: அமெரிக்கா திட்டவட்டம்
ஹமாஸ் அமைப்பினரால் காசாவை நிர்வகிக்கவே முடியாது என அமெரிக்க தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இஸ்ரேலுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காசாவின் எதிர்கால நிர்வாகத்தை இஸ்ரேல் வகுக்கும்
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “ஹமாஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தால், அவர்களுக்கு எதிராக மீண்டும் போர் தொடங்க இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அனுமதி தேவைப்படுமா என்பதை இப்போது கூற முடியாது.

அதே நேரத்தில் அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்திற்கு பிராந்திய அளவில் ஆதரவு இருக்கின்றது. இந்த திட்டம் சிறந்த ஒன்று, டொனால்ட் ட்ரம்புக்கு வேறு மாற்றுத்திட்டம் இல்லை.
அத்துடன், காசாவின் எதிர்கால நிர்வாகத்தை இஸ்ரேலும், அதன் நட்பு நாடுகள் தான் வகுக்க வேண்டும். இதில் ஹமாசை சேர்க்க முடியாத, இராணுவமயமாக்கலை ஹமாஸ் மறுத்தால் அது ஒப்பந்தத்தை மீறுவதாகும்.
காசா மக்கள் சிறந்த எதிர்காலத்தை பெற அமெரிக்கா உதவும்
எனவே அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இது ஒரு ஒப்பந்தம் அதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

மேலும், இஸ்ரேல் உறுதிமொழிகளை அளித்துள்ளது, காசா மக்கள் ஹமாஸ் இயக்கத்தால் அச்சப்படாமல் இருக்க அவர்கள் சிறந்த எதிர்காலத்தை பெற நாங்கள் உதவ விரும்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |