பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தாமதிப்பதால் காசாவின் எல்லையை கட்டுப்படுத்துகிறது இஸ்ரேல்

Israel Israel-Hamas War Gaza
By Faarika Faizal Oct 16, 2025 08:36 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

இஸ்ரேலுடனான போர் நிறுத்த அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக, மேலும் இரண்டு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளதாக காஸாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர்நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, 48 பணயக்கைதிகளையும் ஹமாஸ் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, உயிருடன் உள்ள 20 பணயக்கைதிகளும், 9 பணயக்கைதிகளின் உடலங்களும் இதுவரை இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

ஹமாஸ் ஆயுதங்களை விட்டு முழுமையாக விலக வேண்டுமென அமெரிக்கா எச்சரிக்கை

ஹமாஸ் ஆயுதங்களை விட்டு முழுமையாக விலக வேண்டுமென அமெரிக்கா எச்சரிக்கை

காசாவின் எல்லையை கட்டுப்படுத்தும் இஸ்ரேல் 

இந்த நிலையில், நேற்றுமுன்தினம்(14.10.2025) இரவு ஒப்படைக்கப்பட்ட நான்கு உடலங்களில் ஒன்று, எந்தப் பணயக்கைதிகளுடன் பொருந்தவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தாமதிப்பதால் காசாவின் எல்லையை கட்டுப்படுத்துகிறது இஸ்ரேல் | Israel Hamas War

இதேவேளை, போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தாலும், காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் அனுப்புவதை இஸ்ரேல் தொடர்ந்து கட்டுப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும், பணயக் கைதிகளின் உடலங்கள் அனைத்தையும் ஹமாஸ் இதுவரை ஒப்படைக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 

காசாவுக்குள் நுழைய மருத்துவர்களுக்கு இஸ்ரேல் அனுமதி மறுப்பு

காசாவுக்குள் நுழைய மருத்துவர்களுக்கு இஸ்ரேல் அனுமதி மறுப்பு

காசாவில் பணியாற்றிய ஊடகவியலாளர் ஸாலிஹ் அல் ஜபராவி படுகொலை

காசாவில் பணியாற்றிய ஊடகவியலாளர் ஸாலிஹ் அல் ஜபராவி படுகொலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW