ஹமாஸ் ஆயுதங்களை விட்டு முழுமையாக விலக வேண்டுமென அமெரிக்கா எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், "காசாவில் அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் மீது வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த" ஹமாஸிடம் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதியான இவர் "ஆயுதங்களை விட்டு முழுமையாக விலகி, ஜனாதிபதி ட்ரம்பின் 20 அம்ச அமைதித் திட்டத்தை கண்டிப்பாகக் கடைப்பிடித்து, தாமதமின்றி நிராயுதபாணியாக்குவதன் மூலம் அமைதிக்கான ஒரு வரலாற்று வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஹமாஸை வலியுறுத்தியுள்ளார்.
ஹமாஸ் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதாக வெளியான செய்திகள்
மேலும், சமீபத்திய நாட்களில் ஹமாஸ் அமைப்பினர் பொது மரணதண்டனைகளை நிறைவேற்றுவதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இந்நிலையில், போர்நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள பிற நாடுகளுக்கு அமெரிக்கா எங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளதாகவும், பிராந்தியத்தில் அமைதியின் எதிர்காலத்திற்காக நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றும் கூறினார்.
மேலும், ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் டொம் பிளெட்சரும் "காசாவில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைக்கான ஆதாரங்களால் மிகவும் கவலைப்படுவதாக" கூறிய நிலையில் கூப்பர் ஹமாஸை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |