காசாவுக்குள் நுழைய மருத்துவர்களுக்கு இஸ்ரேல் அனுமதி மறுப்பு
காசாவிற்குள் மருத்துவர்கள் நுழைவதை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருகிறது என்று மருத்துவர் அகமது மொகல்லாட்டி தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், காசாவின் அல் ஷிஃபா மருத்துவமனையின் மருத்துவர் அகமது மொகல்லாட்டி தெரிவிக்கும் போது, காசா பிரதேசத்தில் சுகாதாரத் தேவைகள் மிக அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
அத்துடன், “இந்த நேரம் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன், போர்நிறுத்தத்தின் சத்தத்தின் நடுவில், தரையில் எதுவும் மாறவில்லை என்பதை மக்கள் கவனிக்கவில்லை. எங்களுக்கு இன்னும் பஞ்சம் உள்ளது, மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, பெட்ரோல் இல்லை, உணவுப் பொருட்கள் இல்லை, மருந்துகள் இல்லை,” என்று அவர் கூறினார்.
மருத்துவர்களுக்கு இஸ்ரேல் அனுமதி மறுப்பு
இந்நிலையில், இவை அனைத்தையும் மீறி, இஸ்ரேல் இன்னும் எல்லைகளைக் கட்டுப்படுத்துகிறது.”
அத்துடன், போர்நிறுத்தம் இருந்தபோதிலும், நோயுற்றவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் சிகிச்சையளிக்க காசா பிரதேசத்திற்குள் நுழையக் கேட்ட பெரும்பாலான மருத்துவர்களுக்கு இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளது.
எனவே நடப்பது இன அழிப்பு தொடர்ச்சியாகும். என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில், "பிறவி குறைபாடுகள், இதய நோய்கள், நீரிழிவு அல்லது புற்றுநோய் உள்ள அனைத்து நோயாளிகளும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெறவில்லை என்றும், பலர் பராமரிப்பு இல்லாததால் இறந்துவிட்டதாகவும்" அவர் கூறினார்.
எனவே "இப்போது அனைத்து அம்சங்களிலும் உடனடி தலையீடு மற்றும் சிகிச்சை தேவைப்படும் ஆயிரக்கணக்கான நோய்வாய்ப்பட்ட மக்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். மேலும், 15,000 முதல் 20,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் காசாவில் இருந்து வெளியேற்றப்படுவதற்காக காத்திருக்கிறார்கள், அங்கு உள்ள அமைப்புகள் அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்க முடியவில்லை.” என்றும் அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |